தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து சேவையில் இணைக்கப்பட்டுள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். ஒரு பிரளய காலத்தில் அமிர்த கும்பம் மிதந்து வந்தபோது இந்தத் தலத்தில் சிவபெருமான் கிராத வடிவங்கொண்டு அதனை மூழ்காமல் அருளினார். இத்தலம் சக்தி பீடங்களுள் ஒன்று. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக திருவிழா சிறப்பானது. இத்தலத்தை மையமாக வைத்து ஆண்டுதோறும் சப்தஸ்தானத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவிரி ஆகியவை மற்ற ஆறு தலங்களாகும். |